Home -> News -> Tamilnadu News -> சேலம் – சென்னை ரயில் கொள்ளை வழக்கில் 2 பேர் கைது

சேலம் – சென்னை ரயில் கொள்ளை வழக்கில் 2 பேர் கைது

ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5.78 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை கொள்ளையடித்த வழக்கில் 2 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் துப்பு கிடைத்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா அளித்த தகவலின் அடிப்படையில், இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலின் 350 கி.மீட்டர் தூரத்தை செயற்கை கோள் மூலம் புகைப்படங்களாக நாசா அனுப்பியது. மத்திய உள்துறை அமைச்சகம் மூலமாக நாசாவுக்கு சிபிசிஐடி வைத்த கோரிக்கையை ஏற்று நாசா படங்களை அனுப்பியது. நாசா படங்களின் அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட செல்போன் டவர்களின் அழைப்புகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5.78 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை கொள்ளையடித்த வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தினேஷ், ரோஹன் பார்த்தி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர். சிபிசிஐடி போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர். சின்ன சேலத்திற்கும், விருதாசலத்திற்கும் இடையே ரயில் பெட்டி மேற்கூரையை துளையிட்டு கொள்ளையடித்ததாக கைதானவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனர். கொள்ளையடித்த பழைய ரூபாய் நோட்டுகளை லுங்கியில் சுற்றிக்கொண்டு 2 கொள்ளையர்கள் தப்பியுள்ளனர். ரயில் விருதாசலம் வந்தபோது பணக்கட்டுகளை மற்ற கூட்டாளிகளிடம் தந்துள்ளனர். ரயில் நிலையத்தில் இறங்கி காத்திருந்த மேலும் ஐவருடன் மத்திய பிரதேசம் தப்பி சென்றதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.