" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> கருணாநிதியை நலம் விசாரிக்க சென்ற சீமானுக்கு எதிர்ப்பு

கருணாநிதியை நலம் விசாரிக்க சென்ற சீமானுக்கு எதிர்ப்பு

 

சீமானுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக திமுகவினர் கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதிக்கு இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டு 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளநிலையில் அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதியின் குடும்பத்தினரிடம் உடல் நலம் குறித்து விசாரித்த சீமான் கூறியதாவது ” கருணாநிதியின் உடல் நலம் தேறிவருகிறது என்று ஸ்டாலின் தெரிவித்ததில் மகிழ்ச்சி. அவர் சீக்கிரமே குணமடைந்து வர நான் பிராத்திக்கிறேன். மேலும் முகம் தெரியாத நபரின் பதிவிற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது, எனினும் வருந்துகிறோம். கருணாநிதியின் உடல் நலம் குறித்து நாம் தமிழர் கட்சியினரின் பெயரில் இயங்கும் சிலர் அவதூறு பரப்புகின்றனர்” என்று சீமான் தற்போது கூறியுள்ளார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுகொண்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தவறாக பதிவிடக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருக்கு அறிவுறுத்தினார்.

“ஐயா மு.கருணாநிதி அவர்களின் அரசியல் முடிவுகளோடும், திமுகவின் கொள்கை கோட்பாடுகளோடும் நமக்கு முரண்பாடுகளும், மாற்றுக்கருத்துகளும் இருக்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அதற்காகவே அவர்களை அரசியல்ரீதியாக ஜனநாயக வழிமுறையில் நாம் எதிர்த்தோம். அரசியல் களத்தில் சமரசமின்றி திமுகவின் அரசியல் நடவடிக்கைகளை விமர்சித்தோம். தற்போது ஐயா மு.கருணாநிதி அவர்களின் உடல் நலிவுற்ற இப்பொழு அவரது உடல் நலனை முன்வைத்து விமர்சிப்பதையும், அதனை குறித்தும் எதிர்மறை கருத்துகள் தெரிவிப்பதையும் ஒருபோதும் ஏற்க முடியாது” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தனது கட்சியினரிடம் கூறியிருந்தார்.

மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பேஸ்புக் உள்ளிட்ட எந்த சமூக இணையதளங்களிலும் எதிர்மறை கருத்துகளை நாம் தமிழர் கட்சியினர் பதிவிட்டால் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர் என்று சீமான் எச்சரித்துள்ளார்.