" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> ஈரோட்டில் மாட்டுச்சந்தையில் ரூ.3 கோடிக்கு விற்பனையான மாடுகள்

ஈரோட்டில் மாட்டுச்சந்தையில் ரூ.3 கோடிக்கு விற்பனையான மாடுகள்

ஈரோட்டில் வியாழக்கிழமை கூடிய மாட்டுச்சந்தையில் பசு, எருமை கறவை மாடுகள், வளர்ப்புக்கன்றுக்குட்டிகள் ஆகியவை ரூ.3 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளன.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் காவிரிக் கரை சோதனைச்சாவடி அருகே வாரந்தோறும் புதன் , வியாழன் ஆகிய இரு நாட்களில் மாட்டுச் சந்தை நடைபெறுகிறது. அதில், புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவைப் பசு மாடுகளும், எருமை மாடுகள், வளர்ப்பு கன்றுக்குட்டிகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய இச்சந்தைக்கு , ஈரோடு மட்டுமின்றி நாமக்கல், சேலம், திருப்பூர், திண்டுக்கல், கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்பனைக்காகவும் வாங்கிச்செல்வதற்காகவும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கு கொண்டுவரப்படும் மாடுகள் தரமானதாக உள்ள காரணத்தால் அவற்றை கொள்முதல் செய்ய கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். வாரந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வாரத்தில் சுமார் ரூ.3 கோடிக்கு வணிகம் நடைபெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.