" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையே ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் வாராந்திரச் சிறப்பு ரயில்கள் இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆகஸ்டு 6 முதல் செப்டம்பர் 24 வரை திங்கட்கிழமைகளில் சென்னை எழும்பூரில் இரவு 8.40 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் பகல் 9.20 மணிக்குச் செங்கோட்டையைச் சென்றடையும்.

ஆகஸ்டு 7 முதல் செப்டம்பர் 25 வரை செவ்வாய்க்கிழமைகளில் செங்கோட்டையில் இருந்து மாலை நாலரை மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 5.35மணிக்குச் சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயில்கள் திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக இயக்கப்படும்.

இதேபோல வேளாங்கண்ணியில் இருந்து மும்பை குர்லாவுக்கு ஆகஸ்டு 28 காலை எட்டரை மணிக்கும்,வேளாங்கண்ணியில் இருந்து மும்பை பாந்த்ராவுக்கு ஆகஸ்டு 29 இரவு ஒன்பதே முக்கால் மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.