" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> காவேரி மருத்துவமனைக்கு தமிழக ஆளுநர் வருகை

காவேரி மருத்துவமனைக்கு தமிழக ஆளுநர் வருகை

காவேரி மருத்துவமனைக்கு இன்று காலை வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கருணாநிதி உடல்நலன் குறித்து கேட்டறிந்தாா்.

சிறுநீரக நோய்த்தொற்று ஏற்பட்டு கடந்த இரண்டு நாள்களாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதி தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவமனையில் சேர்க்கும் முடிவை மருத்துவ சிறப்புக் குழுவினர் எடுத்தனர். கருணாநிதி சிகிச்சை பெற்று வந்த கோபாலபுரம் இல்லத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு சுமார் 12.20 மணிக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், டாக்டர் கோபால், சென்னை காது-மூக்கு-தொண்டை மற்றும் முதியோர் நல மருத்துவ சிறப்புக் குழுவினர் முதலில் வந்தனர்.

இதையடுத்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து கோபாலபுரத்தில் குழுமியிருந்த தொண்டர்கள், பத்திரிகையாளர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கருணாநிதிக்கு சிகிச்சைஅளித்து வரும் ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு  ஆம்புலன்ஸ் மூலம் அதிகாலை 1.15 மணிக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டு 1.30 மணி அளவில் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்து வரும் நிலையில், தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காவேரி மருத்துவமனைக்கு வந்தடைந்தார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.