" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> புதுக்கோட்டையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்ற காரை உரசிய அரசுப்பேருந்து

புதுக்கோட்டையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்ற காரை உரசிய அரசுப்பேருந்து

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டையிலிருந்து திருச்சி சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் கார் மீது, அரசுப் பேருந்து உரசியது.

புதுக்கோட்டை மாவட்டத்துக்குச் சென்ற ஆளுநர், அங்கு பல்வேறு இடங்களில் தூய்மை இந்தியா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து பாதுகாப்பு வாகனங்கள் முன்னும் பின்னும் செல்ல பன்வாரிலால் புரோகித் திருச்சி புறப்பட்டார்.

 

புத்துடையான்பட்டி என்ற இடத்தை கடந்தபோது எதிரே வந்த அரசுப் பேருந்து ஒன்று, ஆளுநர் இருந்த காரின் பக்கவாட்டுப் பகுதியை உரசிக்கொண்டு கடந்தது. ஆனால் விபத்து ஏதும் நேரிடவில்லை. உடனடியாக கான்வாயை நிறுத்திய பாதுகாப்பு அதிகாரிகள், ஆளுநரை வேறு காருக்கு மாற்றினர். பின்னர் அங்கிருந்து பன்வாரிலால் புரோகித் பத்திரமாக திருச்சியில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு வந்து சேர்ந்தார்.