" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> ஈரோட்டியில் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை ஒப்படைத்த சிறுவனுக்கு ரஜினியை நேரில் பார்க்க ஆசை

ஈரோட்டியில் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை ஒப்படைத்த சிறுவனுக்கு ரஜினியை நேரில் பார்க்க ஆசை

 

 

ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் யாசின், அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறான். சாலையோரத்தில் கிடந்த பையில் நிறைய பணம் இருந்தது அதை கண்ட சிறுவன் தன் வறுமையை கூட மனதில் கொள்ளாமல் அந்த பையை அவனுடைய ஆசிரியரிடம் ஒப்படைத்தான். ஆசிரியர் அவனை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று நடந்ததைக் கூறினார். பணத்தைப் பார்த்து சிறுவனுக்கு வராத ஆசையைக் கண்டு வியந்த போலீசார், அவன் நேர்மைக்கு ஒரு சல்யூட் அடித்தனர். பணத்தைப் பெற்றுக்கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் யாசினின் நேர்மையைப் பாராட்டி வாழ்த்துகளும் கூறினார்

ஈரோட்டியில் சாலை ஓரத்தில் கேட்பாரற்று கிடந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசிடம் ஒப்படைத்த சிறுவனை ரஜினி மக்கள் மன்றத்தினர் சந்தித்தனர். அப்போது தனக்கு உதவிகள் எதுவும் வேண்டாம் என்றும் ரஜினி அங்கிளை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசையோடு கேட்டுள்ளான்.

யாசினின் நேர்மை செயலை பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் பலரும் இவனுக்குத் தேவையான உதவிகள் செய்ய முன்வந்த போது யாசினின் பெற்றோர்கள் அதனை மறுத்துவிட்டனர். இந்த நிலையில் ஈரோடு ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் யாசின் மற்றும் அவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தனர். அப்போது யாசினுக்கு ஏதேனும் உதவிகள் தேவையென்றால் அதனைச் செய்ய தயாராக உள்ளதாகக் கூறினார்கள். இந்தக் காலத்தில் இது போன்ற நல்ல குணங்கள் உள்ள மனிதர்களைப் பார்ப்பது கடினம், யாசின் நல்ல மனிதனாக வளருவான் போன்ற வாழ்த்துகள் கூறினார்கள்.

ரஜினி மக்கள் மன்றத்தினர் தெரிவித்த வாழ்த்துக்கு நன்றி கூறிய யாசின், “உதவிகள் எதுவும் வேண்டாம். ஆனால் ரஜினி ஆங்கிளை நேரில் பார்க்கணும், நான் அவருடைய ரசிகன். எனக்கு அவரை பார்க்கணும் ரொம்ப நாள் ஆசை” என்று கூறியுள்ளான்.

நேர்மையாக வாழ நினைக்கும் இந்தச் சிறுவனின் ஆசையை விரைவில் பூர்த்தி செய்வோம், ரஜினிகாந்தை சந்திக்க ஏற்பாடுகள் செய்வோம் என்று மக்கள் மன்றத்தினர் உறுதி அளித்துள்ளனர்.