" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு

குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு

 

குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன் பி எஸ் சி) குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகளை நடத்தி வருகிறது. போட்டித்தேர்வாளர்கள் சங்கத்தின் சார்பில், குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை தமிழக அரசு உயர்த்த வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழக சட்டமன்றத்தில் மே 29ஆம் தேதி முதல் ஜூலை 9ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடந்து முடிந்தது. கடந்த மாதம் சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விரைவில் குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்த்தப்படும் என்று அறிவித்தார். இதுபற்றிய அரசாணை, இன்று (ஜுலை 19) வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, குரூப் 1 தேர்வு எழுதும் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான வயது வரம்பு 35ல் இருந்து 37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 30ல் இருந்து 32ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

துணை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட பதவிகள் குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. தமிழக அரசின் இந்த அறிவிப்பினால், அடுத்த நடைபெறவுள்ள குரூப் 1 தேர்வில் அதிக எண்ணிக்கையில் போட்டித் தேர்வாளர்கள் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.