" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> கருணாநிதி மேல் சிகிச்சைக்காக உதவிகள் அளிக்க தமிழக அரசு தயாராக உள்ளது – முதலமைச்சர் பேச்சு

கருணாநிதி மேல் சிகிச்சைக்காக உதவிகள் அளிக்க தமிழக அரசு தயாராக உள்ளது – முதலமைச்சர் பேச்சு

நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது என்று முதல் – அமைச்சர் பழனிசாமி கூறினார்.

சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை பின்பற்ற வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது என்றார்.

மேலும், திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமடைந்து வருகிறார். அவரது உடல்நலம் குறித்து தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தேன். மேல் சிகிச்சைக்காக உதவிகள் அளிக்க தமிழக அரசு தயாராக உள்ளது என்றும் கூறினார். அதோடு, சேலத்தில் பேல்வேறு நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்றும் பழனிசாமி தெரிவித்தார்.