" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> 2வது நாளாக தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

2வது நாளாக தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

 

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழகத்தில் நாளொன்றுக்கு ரூ.250 கோடி இழப்பு ஏற்படும் எனத் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக் கட்டணம், பெட்ரோல், டீசல் விலையை 3 மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயித்து, ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும், வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (ஜூலை 20) முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தியா முழுவதும் சுமார் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகளும், தமிழகத்தில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.250 கோடி இழப்பு ஏற்படும் எனத் தெரிகிறது.

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் இன்றும் (ஜூலை 21) தொடர்கிறது.