" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> திருவொற்றியூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பஸ் எரிந்ததால் பரபரப்பு

திருவொற்றியூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பஸ் எரிந்ததால் பரபரப்பு

சென்னை, திருவொற்றியூர் அடுத்த அன்னை சிவகாமி நகர் பகுதியிலுள்ள காலி இடங்களில் சில கம்பெனிகள் மற்றும் கல்லூரிகளின் பேருந்துகள் அந்த இடங்களில் நிறுத்தி வைக்கப்படும்.

அந்த பேருந்துகளில் ஸ்ரீபெரும்பதூர் நிசான் கார் நிறுவனத்திற்கு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் சொகுசு பேருந்தானது, நேற்று விடுமுறை காரணமாக அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.

பேருந்தின் அருகே இருந்த குப்பைகளில் தீ பிடித்து பேருந்தின் டயர் பகுதியிலும் தீ பிடித்து பேருந்து முழுவதும் எரிந்து தீக்கிரையானது.

இதனைக்கண்ட பொதுமக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, தீ அணைக்கப்பட்டு, அருகே நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் சேதமில்லாமல் தப்பின.

இதுகுறித்து எண்ணூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் அன்னை சிவகாமிநகர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.