" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> தமிழகத்தில் 412 மையங்களில் நீட் தேர்வு பயிற்சி மையம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் 412 மையங்களில் நீட் தேர்வு பயிற்சி மையம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அமைச்சர் செங்கோட்டையன் அடுத்த மாதம் முதல் தமிழகத்தில் 412 மையங்களில் நீட் தேர்வு பயிற்சி மையம் செயல்படும் என தெரிவித்தார்.

அனைத்து மாவட்ட நுாலகங்களிலும் ஐ.ஏ.எஸ்., அகாடமி செயல்பட இரு மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள 4622 நுாலகங்களில் 314 முழுமையாக செயல்படுகின்றன.

இந்த நுாலகங்கள் ஒரு மாதத்திற்குள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்துகிறோம். அடுத்த மாதம் முதல் தமிழகத்தின் 412 மையங்களில் நீட் தேர்வு பயிற்சி மையம் செயல்படும். மாவட்ட நுாலகங்களில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு காணொளி மூலம் பயிற்சி அளிக்கப்படும். அதற்காக மாவட்ட நுாலகங்களில் புத்தக வசதி செய்யப்படும். மாணவர்களின் திறன் அறிந்து ஐ.ஏ.எஸ்., மற்றும் குரூப் -1 தேர்விற்கு பயிற்சி அளிக்கப்படும்

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.