" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> தமிழகத்திலும் இந்தியாவிலும் 3வது அணி உருவாவது நல்லதல்ல திருமாவளவன்

தமிழகத்திலும் இந்தியாவிலும் 3வது அணி உருவாவது நல்லதல்ல திருமாவளவன்

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டுமென்றால் தமிழகத்திலும் இந்தியாவிலும் தற்போதைய சூழ்நிலையில் 3வது அணி உருவாவது நல்லதல்ல என திருவண்ணாமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

சென்னை – சேலம் 8வழி பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நேற்று மாலை அக்கட்சியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 8 வழி பசுமைச் சாலை திட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் எத்தகைய கருத்துகளும் கேட்காமல் இத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசுக்கு உடந்தையாக தமிழக அரசு செயல்படுகிறது. காடுகள், நீர் ஆதாரங்கள் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட அனைத்தும் பறிபோகும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இத்திட்டத்தை பற்றி எதிர்ப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது. இத்திட்டத்தை எதிர்த்து வரும் 20ந் தேதி சேலம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

தமிழகத்தில் இயற்கை வளங்களை அழிக்கும் வகையில் மத்திய அரசு தமிழகத்தின் மீது திட்டங்களை திணிப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதனை எதிர்த்து பேச வலுவில்லாத நிலையில் தமிழக அரசு இயங்குவது அதிர்ச்சியளிக்கிறது. தூத்துக்குடி துப்பாச்சி சூடு சம்பவம் 8 வழி பசுமைச் சாலை திட்டம் ஆகியவற்றில் மத்திய அரசின் தலையீடு இருப்பது உணர முடிகிறது. மத்திய அரசு மாநில அரசுடன் இணக்காக இருப்பது தவறல்ல ஆனால் மாநில அரசை முடக்கி வைத்துவிட்டு மத்திய அரசு சட்டம் ஒழுங்கை கையில் எடுப்பது அப்பட்டமான ஜனநாயக விரோத போக்காகும். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடக்கிறது என்றும், வெளிப்படையாக பேசும் அளவிற்கு தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்றுவருகிறது. வருமானவரி சுதந்திரமாக செயல்படுகிறார்கள். என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

மத்திய அரசின் வழிகாட்டுலின்படி எதிரிகளின் மீது சோதனைகள் நடத்துவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இந்த சோதனை நடத்துவதில் உள்நோக்கம் உள்ளது. தற்போது எடப்பாடி அரசு மத்திய அரசுக்கு இணக்கமாக இல்லை என்பதை எடுத்துக்காட்டாக தற்போது வருமான வரி சோதனை நடைபெற்றுள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஒரு நெருக்கடியையும் தமிழக அரசில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வருமான வரி சோதனை உள்ளது. இந்த வருமான வரி சோதனை என்பது இந்த அரசின் மீது ஊழல் குற்றம் சுமத்தி தமிழக அரசை மத்திய அரசு கலைப்பதற்கு முயற்சிக்கலாம் அல்லது முதலமைச்சரை மாற்றுவதற்காக கூட இருக்கலாம் என்ற உள்நோக்கத்துடன் மத்திய அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டிய அவர், நடிகர் ரஜினிகாந்த் 8வழிச்சாலை திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பது அதிர்ச்சி தரக்கூடிய செய்தி அல்ல. அவர் வலதுசாரி சிந்தனையாளர் என்பதை உறுதிபடுத்தி வருகிறார். இதனால் அவர் ஆளுகின்ற தரப்புக்கு ஆதரவு தெரிவித்திருப்பது வியப்பு ஒன்றுமல்ல. பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையில் கூட்டணி தொடரும் பாமக திமுக தலைமையில் உள்ள கூட்டணியில் சலசலப்பு ஏற்படுத்துவதற்காகவும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் பாஜக மற்றும் பாமக கருத்து கூறிவருகிறது.

மதவாத சக்திகளை முறியடிக்க வேண்டுமானால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும். தமிழகத்திலும் இந்தியாவிலும் தற்போதைய சூழ்நிலையில் 3வது அணி உருவாவது நல்லதல்ல சூழ்நிலைக்கு ஏற்றதல்ல என்றார்.