" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> சென்னைக்கு அழைத்து வரப்பட்ட திருமுருகன் காந்தி

சென்னைக்கு அழைத்து வரப்பட்ட திருமுருகன் காந்தி

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பேசிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, நார்வேயிலிருந்து பெங்களூரு திரும்பிய போது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து நீதி கேட்டு ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் பதிவு செய்து விட்டு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று இந்தியா வந்தார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே தேச துரோக வழக்கு இருந்ததால், லுக் அவுட் நோட்டீஸ் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து பெங்களூரு சென்ற தமிழக போலீசார், அவரை சென்னை அழைத்து வந்தனர். பின்னர், இன்று காலை அவர் சைதாபேட்டை மாஜிஸ்திரேட் பிரகாஷ் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதனால், அவர் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.