" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> வாட்ஸ் அப் வதந்தி செய்திகளை பரவுவதைத் தடுக்க இனி 5 பேருக்கு மேல் பார்வேர்டு பண்ண முடியாது

வாட்ஸ் அப் வதந்தி செய்திகளை பரவுவதைத் தடுக்க இனி 5 பேருக்கு மேல் பார்வேர்டு பண்ண முடியாது

வதந்தி செய்திகளை பரவுவதைத் தடுக்க, ஊடகச் செய்திகளை உடனடியாக ஃபார்வேர்டு செய்யும் வசதியை நீக்கவும் வாட்ஸ்-அப் திட்டமிட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் மூலம் பரவும் வதந்தியால், குழந்தையைக் கடத்த வந்தவர் எனக் கூறி பலர் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்தன. இதையடுத்து வதந்திகளைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு கடுமையாக அறிவுறுத்தியது.

இந்நிலையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே தகவல்களை பகிரும் வகையில் கட்டுப்பாட்டை கொண்டு வரப் போவதாகவும், குய்க் ஃபார்வேடு பட்டனை நீக்க முடிவு செய்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப் என்பது தனிநபர் சார்ந்த தகவல் பகிரும் செயலியாகவே தனது சேவையைத் தொடரும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.