Home -> News -> அரியலூர் அரசு பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்த ஆசிரியர்

அரியலூர் அரசு பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்த ஆசிரியர்

அரியலூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவா் விடுமுறை தினத்தில் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்தது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அரியலூா் மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர் சுவாமிநாதன் பிற ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார். அரியலூா் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கணித ஆசிரியராக சுவாமிநாதன் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னா் விடப்பட்ட காலாண்டு தோ்வு விடுமுறையில் பள்ளிக்கு சென்ற சுவாமி நாதன் மாணவா்களின் கழிவறை அசுத்தமாக இருப்பதை பார்த்த ஆசிரியர் சுவாமிநாதன் அதனை தாமே சுத்தம் செய்துள்ளார் ஆசிரியர் கழிவறையை சுத்தம் செய்யும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.