Home -> News -> National News -> தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை 8ம் தேதி பொறுப்பேற்பு

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை 8ம் தேதி பொறுப்பேற்பு

தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் வரும் 8-ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து கட்சிப் பொறுப்புகளையும் ராஜிநாமா செய்தார். அவர் தெலங்கானா மாநில ஆளுநராக வரும் 8-ஆம் தேதி பொறுப்பேற்க வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழக அரசு மற்றும் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைவர் தேர்வு: இதனிடையே தமிழக பாஜக புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணிகளில் கட்சித் தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. புதிய தலைவருக்கான தேர்தல் வரும் டிசம்பரில் நடைபெறவுள்ளது. புதிய தலைவர் தேர்தலுக்கு ஓரிரு மாதங்களே இருக்கும் நிலையில், இடைக்காலத் தலைவராக மூத்த தலைவர் ஒருவரை நியமிப்பது குறித்தும் கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது. புதிய தலைவருக்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.