Home -> News -> Cinema News -> விஜய்யின் பிகில் பஸ்ர்ட் லுக் ரிலீஸ்

விஜய்யின் பிகில் பஸ்ர்ட் லுக் ரிலீஸ்

எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் பெயர் ‘பிகில்’ என அறிவிக்கப்பட்டு அதன் முதல் பார்வை சற்று முன் வெளியானது,

தளபதி விஜய்யை வைத்து பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி இயக்குநர் அட்லீ இயக்கி வரும் படத்தின் பெயர் மற்றும் பஸ்ர்ட் லுக் போஸ்டர் குறித்து இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்றும், செகண்ட் லுக் போஸ்டர் இரவு 12 மணிக்கு வெளியிடப்படும் என்றும் படக்குழு அறிவித்திருந்தது. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், விவேக், இந்துஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், ‘தளபதி 63’ படத்தின் பெயர் மற்றும் பஸ்ர்ட் லுக் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்திருப்பது உறுதியாகி உள்ளது. ‘பிகில்’ படத்தின் பஸ்ர்ட் லுக் வெளியானது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதிலும் நாளை (ஜூன் 22ம் தேதி) விஜய்யின் பிறந்தநாள் என்பது கூடுதல் சிறப்பான விஷயம்.