" /> My Title page contents
Home -> News -> தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை இல்லை. – ஜி.கே வாசன் பேச்சு

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை இல்லை. – ஜி.கே வாசன் பேச்சு

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை நிலவி வருவதாக முதல்வர் சொல்வதை தவறு என்று சொல்லி விட முடியாது. அதே சூழ்நிலையில், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையும் நிலவி வருகிறது என்று, திருப்பூரில் செய்தியாளர்களின் சந்திப்பின் போது, தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்தார்.

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், அவிநாசி ரோட்டிலுள்ள தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்,மாவட்ட தலைவர் சிறுமுகை ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜி.கே காலந்து
கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

பின் செய்தியாளர்களிடம் ஜி.கே வாசன் தெரிவிக்கையில்.,

சமீபகாலமாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக செயின் பறிப்பு, கொலை, பாலியல் வன்கொடுமை, ஆகியவை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், அரசு அவற்றில் கவனம் செலுத்திடவேண்டும்.பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை நிலவி வருவதாக முதல்வர் சொல்வதை தவறுஎன்று சொல்லி விட முடியாது. அதே சூழ்நிலையில், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையும் நிலவி வருகிறது என்றும், இந்தியாவின் முதுபெரும் தலைவரும், திமுக தலைவருமான
கருணாநிதி அவர்கள் உடல் நலம் தேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

அவர் பூரண குணமடைந்து மீண்டும் திரும்பி வர வேண்டும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் விரும்புகிறது. மேலும், சொத்து வரி உயர்வை தமிழக அரசு குறைத்திட வேண்டும். ஜி.எஸ்.டி, நூல் விலை, உயர்வு ஆகியவற்றில் மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்தாததால் பின்னலாடைத்துறை சரிவைக் கண்டு
வருகிறது என்று கூறினார்.