" /> My Title page contents
Home -> News -> கருணாநிதி உடல்நலம் பற்றி விசாரிக்க குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வருகை

கருணாநிதி உடல்நலம் பற்றி விசாரிக்க குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வருகை

 

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிப்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் இன்று சென்னை வர இருக்கிறார்

அது தவிர, குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு நாளை பகல் 12.30 மணிக்கு சென்னை வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை சென்னை வரும் வெங்கையா நாயுடு மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க இருக்கிறார்.