Home -> News -> National News -> மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி உடல்நலக்குறைவால் காலமானார்!

மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி உடல்நலக்குறைவால் காலமானார்!

முன்னாள் மத்திய அமைச்சரும், இந்தியாவின் மூத்த வழக்கறிஞரும் ராம்ஜெத்மலானி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். 95வயதான அவர் பாகிஸ்தானில் சிந்து பகுதியில் பிறந்தவர். சொந்த ஊரில் வழக்கறிஞராக பணியாற்றிய அவர். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் மும்பைக்கு வந்து வழக்கறிஞராக பணி புரிந்து வந்தார்.

1996 ஆம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில் சட்ட மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக பணியாற்றினார். மேலும், இந்திரா , ராஜீவ் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக ராம்ஜெத்மலானி வாதாடியவர். 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளிலும் இவர் வாதாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்காக பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார். இதன் காரணமாக 3 பேரும் தூக்குத் தண்டனையில் இருந்து தப்பினார்கள்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதில் ராம்ஜெத் மலானிக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த 3 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று அவர் கடுமையாக பாடுபட்டவர். இதற்க்காக, ராம்ஜெத் மலானிக்கு தமிழர் அமைப்புகள் 2014 ஆம் ஆண்டு பாராட்டு விழாக்கள் எல்லாம் நடத்தியுள்ளது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று தமிழர்களை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற ராம்ஜெத் மலானி பணம் வாங்காமல் வாதாடினார் என வைகோ பல விழாக்களில் குறிப்பிட்டுயிருக்கிறார்.

மறைந்த ராம் ஜெத்மலானி உடலுக்கு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.