Home -> News -> உலக கோப்பை கிரிக்கெட் இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழத்தியது தென் ஆப்பிரி்க்கா

உலக கோப்பை கிரிக்கெட் இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழத்தியது தென் ஆப்பிரி்க்கா

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில், இலங்கையை அணியை, தென் ஆப்பிரிக்கா, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது!

முதலில் பேட் செய்த இலங்கை அணி 49.3 ஓவர்களில் 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 204 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 37.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 206 ரன்கள் சேர்த்து 9 வி்க்கெட் வி்த்தியாசத்தில் வென்றது. 2-வது விக்கெட்டுக்கு 175 ரன்கள் சேர்த்து ஆம்லா 80 ரன்களிலும், டூப்பிளசிஸ் 96 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிெபறவைத்தனர்.தென் ஆப்பிரிக்க அணி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், இந்த வெற்றி மூலம் தன்னோடு சேர்த்து இலங்கை அணியையும் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டது.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தோல்வி அடைந்ததால் அரையிறுதி சுற்றுக்குள் எளிதாக முன்னேறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது. இனிமேல் இலங்கை அணி மீதமிருக்கும் இரு போட்டிகளில் வென்றாலும் மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை நம்பி இருக்க வேண்டும்.அதாவது, இலங்கை அணி அடுத்து வரும் இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு எதிரான இரு போட்டிகளிலும் கட்டாயம் வெல்லவேண்டும். அடுத்ததாக, இங்கிலாந்துஅணி தன்னுடைய இரு போட்டிகளிலும் தோற்க வேண்டும். அதாவது இந்தியாவிடமும், நியூஸிலாந்திடமும் இங்கிலாந்து தோற்க வேண்டும். மேலும், பாகிஸ்தானும், வங்கதேசமும் தங்களுக்கு மீதமிருக்கும் இரு ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் தோற்க வேண்டும். இவை எல்லாம் நடந்தால், இலங்கை அணி அரையிறுதிக்குள் செல்லும்.