Home -> News -> International News -> சவுதி அரேபியாவில் வங்கியின் தலைவராக பெண் நியமனம்

சவுதி அரேபியாவில் வங்கியின் தலைவராக பெண் நியமனம்

சவுதி அரேபியாவில் முதல் முறையாக வங்கியின் தலைவராக ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவை நவீனமயமாக்கும் முயற்சியில் பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மான் ஈடுபட்டுள்ளார். சவுதி வி‌ஷன் 2030 என்ற திட்டத்தின்படி அங்கு வாழும் பெண்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக கடந்த ஜூன் மாதம் சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டது.புதிய வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லுப்னா அல் ஓலயன் அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்தார். போர்பஸ் இதழின் மத்திய கிழக்கு நாடுகளில் 2018-ம் ஆண்டு ஆதிக்கம் நிறைந்த பெண்களுக்கான பட்டியலில் முதல் இடத்தை பெற்றிருந்தார்.
தங்களது குடும்பத்தினர் நடத்திவரும் தொழில் குழுமத்துக்கு தலைமை வகித்து வருகிறார். சவுதி அரேபியாவின் நிதி துறையில் அந்நாட்டின் மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்.