Home -> News -> International News -> சென்னையில் தொழில் அதிபா் ரன்வீர்ஷா வீட்டில் சிலைகள் பறிமுதல்

சென்னையில் தொழில் அதிபா் ரன்வீர்ஷா வீட்டில் சிலைகள் பறிமுதல்

சென்னை தொழில் அதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இருந்து 89 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிலைக்கடத்தல் வழக்கு தொடா்பாக தீனதயாளன் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. தற்போது அவா் ஜாமீனில் உள்ள நிலையில் அவா் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கத்தல் தடுப்பு பிரிவினா் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினா் இன்று சென்னை சைதாபேட்டையில் உள்ள தொழில் அதிபா் ரன்வீா் ஷா வீட்டில் சோதனை மேற்கொண்டனா். ஜவுளி ஏற்றுமதி செய்யும் ரன்வீா் ஷா வீட்டில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த 56 கற்சிலைகள், 12 ஐம்பொன் சிலைகள், 22 தூண்கள் உள்பட 89 பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதனைத் தொடா்ந்து விசாரணை அதிகாரி பொன்.மாணிக்கவேல் செய்தியாளா்களிடம் பேசுகையில், எனது அனுபவத்தின் அடிப்படையில் இவை அனைத்துமே வழிபாட்டு தளங்களில் இருந்து கொண்டுவரப்பட்டவை தான். இந்த சிலைகளுக்கு சான்றுகள் உள்ளன. சான்றுகளின் படி பார்க்கும போது இவை 100 ஆண்டுகள் தொண்மை வாய்ந்தவை என்பது உறுதிப்படுகிறது. தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள சிலைகள் அனைத்தும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன என்று தெரிவித்துள்ளார்.