Home -> News -> International News -> மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு மேலாடையின்றி பாட்டு பாடிய செரினா வில்லியம்ஸ்

மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு மேலாடையின்றி பாட்டு பாடிய செரினா வில்லியம்ஸ்

அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக கருதப்படுகிறது. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டென்னிஸ் நட்சத்திரம் செரினா வில்லியம்ஸ் ஒரு பாடலை பாடி அதன் வீடியோவை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் அவர் மேலாடை இன்றி தனது மார்பகத்தை கையால் மறைத்தவாறு உள்ளார். அவர் ஐ டச் மைசெல்ஃப் என்ற பாடலை பாடியுள்ளார்.

செரினா வில்லியம்ஸ் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவை வெளியிட்டு கூறியதாவது:

பெண்கள் தங்கள் மார்பகங்களை கையால் அவ்வப்போது சோதனை செய்து கொள்ள வேண்டும் என்பதை ஆம்ப்லெட் தனது பாடலில் எழுதியுள்ளார். இதுபோல் அவ்வப்போது சோதனை செய்தாலே ஏராளமானவர்களின் உயிரை காக்க முடியும்.

மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படி செய்துள்ளேன். வந்த பின் அவதிப்படுவதை விட வரும்முன் காப்பதே நல்லது என்பது அனைவரும் உணர்வீர்கள் என நம்புகிறேன்.இந்த வீடியோ மார்பக புற்றுநோயால் உயிரிழந்த திவா மற்றும் கிரிஸ்சி ஆம்ப்லெட் ஆகியோருக்கு மரியாதை செய்வதற்காக வெளியிடப்பட்டது என்று செரினா கூறியுள்ளார்.