Home -> News -> International News -> மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி – தமிழக பாஜக தலைவ தமிழிசை

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி – தமிழக பாஜக தலைவ தமிழிசை

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது உறுதி என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான பூர்வாங்கப்பணிகள் அனைத்தும் படிப்படியாக துறைவாரியாக மத்திய மாநில அமைச்சகங்களில் அரசாங்க நடைமுறைப்படி செய்யப்பட்டு வரும் சூழலில் இந்த மிகப்பெரிய திட்டத்திற்கான இறுதி திட்ட அறிக்கை தயாரானதுமே நிதி ஒதுக்கி அரசாணை வரும் என்பது நடைமுறை.

காங்கிரஸ் ஆட்சியில் சுதந்திரம் அடைந்த பின்னர் 60 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை 9 இடங்களில் மட்டுமே வந்துள்ளது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் மோடி அவர்களின் அரசு 14 இடங்களில் எய்ம்ஸ் மாடல் மருத்துவமனைகள் புதிதாக அமைய கொள்கை முடிவு எடுத்து செயலாற்றி வருகிறது. நிச்சயம் மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமையும் என்பது உறுதி என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.